home loans
manaosai.com
வழிகாட்டிகள்..! PDF Print E-mail
சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 15 February 2010 15:24

இந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன. அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவனுக்கு வேலை. ஐந்தாவது  தரமாய்ப் புறூவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத்துப் பிழைகள் கண்ணில் தட்டுப்பட்டன. வாணியிடம் கொடுத்திருந்தால் இப்படிப் பிழைகள் வந்திராது. முதலாவது தடவை புறூவ் பார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவளிடமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட்டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும் போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும் போது வரும் 'பிரிண்ட் அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து  தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது.

Last Updated on Tuesday, 16 February 2010 05:38
Read more...
 
நந்திக்கடல் தாண்டி... PDF Print E-mail
Latest
Written by Chandra   
Monday, 01 February 2010 07:51
நந்திக்கடல் தாண்டி முல்லைக் கடற்கரையை நாம் சென்றடைந்த போது கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். இன்முகத்துடன் அவர் எம்மை வரவேற்ற விதம் என்னோடு ஒட்டியிருந்த களைப்பை அப்படியே களைந்து விட்டது.

ஐந்து நாட்கள்தான் இம்முறை வன்னியில் நிற்க முடியும். ஜேர்மனியிலிருந்து புறப்படும் போதே அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கு 'இம்முறை பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகிறேன்' என்று மின்னஞ்சல் மூலம் என் வரவைத் தெரிவித்திருந்தேன். நாம் 22ந்திகதி ஐப்பசி மாதம் 2002 இல் வன்னியைச் சென்றடைந்த அன்று நோர்வே பேச்சு வார்த்தைக் குழுவினருடனான சந்திப்பு கிளிநொச்சி அரசியல் துறை அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்ததால் தமிழ்செல்வன் அவர்களால் உடனடியாக எம்மை வந்து சந்திக்க முடியவில்லை. ஆனாலும் தன் சார்பாக சுதா மாஸ்டரையும், மருத்துவத்துறை ரேகாவையும் அனுப்பி வைத்திருந்தார். அவர்களோடு டுபாய் பிட்டு அவித்துத் தந்த நிமலனும், புகழோவியனும் வந்து இணைந்து கொண்டார்கள். - மேலும்
Last Updated on Monday, 01 February 2010 08:24
 
விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன் PDF Print E-mail
நூல்கள்
Written by கலைவாதி கலீல்   
Friday, 20 November 2009 07:35

கவிதைக்கென்று சில வரையறைகளும் வரம்புகளும் உள. யாப்பமைதியுடனும், அணிச்சிறப்புடனும், தளைதட்டாமல் எழுதப்படுவதே கவிதை என்பர். கவிதையில் பிழையிருப்பின் அதனைச் ´சங்கப் பலகை` ஏற்றுக்கொள்ளாது. ஒரு காலத்தில், கடினமான செய்யுள் வடிவில் இருந்த கவிதைகள், பின்னர் படிப்படியாக இலகுபடுத்தப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்ற பா வகைகளைப் படித்துத் தெளிய பகுப்புரை மற்றும் தனி அரும்பத அகராதிகள் தேவைப்பட்டன.  பின்னர் செய்யுள்கள், கவிதை மற்றும் பாடல் வடிவம் பெற்றன. ஆயினும் யாப்பிலக்கணம் சற்றும் பிசகாமல் தளைதட்டாமல் எழுதப்பட்டது, அல்லது பாடப்பட்டது. காலம் செல்லச்செல்லக் கவிதையின் கடினத்தன்மையும் குறைக்கப்பட்டது. ஆயினும், கவிதை இலக்கணத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இலகுவாய் விளங்கிக் கொள்ளத் தக்க சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும் கவிதையின் தனித்துவம் கெட்டுவிடாமல் பேணிக் காக்கப்பட்டது. அதாவது யாப்பிலக்கணம் முறையாகப் பேணப்பட்டது.

Last Updated on Sunday, 31 January 2010 12:14
Read more...
 
தொப்புள்கொடி (நாவல்) PDF Print E-mail
நூல்கள்
Written by Chandra   
Monday, 08 February 2010 07:53
மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"
 
கப்டன் மொறிஸ் PDF Print E-mail
Heroes
Written by திலீபன்   
Wednesday, 01 July 2009 08:30
பரதரராஜன்.தியாகராஜா - ஆத்தியடி, பருத்தித்துறை   

 நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!

என்றான். அவன்தான் மொறிஸ்.

1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.

நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.

சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.

Last Updated on Monday, 08 February 2010 07:25
Read more...
 
நந்திக்கடல் தாண்டி... 2 PDF Print E-mail
Latest
Written by Chandra   
Monday, 08 February 2010 06:42
முல்லைக்கடல்  தனக்கேயுரிய அமைதி கலந்த  ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து  வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்க்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள் சட்டென்று நினைவில் வந்து போயின.

கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக் கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்... more

Last Updated on Monday, 08 February 2010 09:13
 
சிவா PDF Print E-mail
சிறுகதைகள்
Written by நிர்மலன்   
Monday, 08 February 2010 08:04
ஐந்தாறு வருடங்களுக்குப் பின் சிவாவைக் கண்டதில், என் மனதில் மகிழ்ச்சியும் வியப்பும் பீதியும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தன. சிவாவின் முகம் இறுகியிருப்பது  போலிருந்தது. நான் அருகில்சென்று அமர்ந்ததையும் கவனியாதவனாய், மணவறையை நிமிர்ந்து பார்த்தபடியிருந்தான். குட்டையாக முடியை வெட்டியிருந்த அவன் நன்கு மெலிந்து கறுத்திருந்தான். முகத்தில் படர்ந்திருந்த நான்கைந்து நாள் தாடியையும் மீறி, அதிலிருந்த காயத்தின் வடு தெரிந்தது.

'என்னடா சிவா'

' ஓ!.. முரளி ஏதோ இருக்கிறன்டா...'

அவன் கதைக்கையில் மேற்தாடையின் முன்பல்லொன்று உடைந்திருப்பது தெரிந்தது. ஆறேழு ஆண்டுகள் இருக்குமோ? இவனைப் பிடித்து உள்ளே அடைத்து.. எப்படி இவன் வெளியில் வந்திருப்பான்? இவனுடன் கதைப்பதும் பயந்தான். யாராவது எங்கேயும் போட்டுக் கொடுத்தால்...
'என்ன முரளி யோசனை? பயப்படுறியா?' துயர்கலந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னான் 'என்னிலை குற்றம் நிரூபிக்கப்படாமல், போன கிழமை தான் கோட்ஸாலை வெளியிலை விட்டவங்கள்.'
Last Updated on Monday, 08 February 2010 09:12
Read more...
 
தீட்சண்யம் PDF Print E-mail
நூல்கள்
Written by சந்திரவதனா   
Wednesday, 01 July 2009 09:40
thedsanyambkபல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு, 92 கவிதைகளுடன், சுவடி பதிப்பகத்தாரின் தயாரிப்பில், மனஓசை` வெளியீடாக வெளிவந்திருக்கிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு. THEEDCHANYAM (Poems)
Author: S.T.Premarajan (Theedchanyan)
(Thiyagarajah Premarajan)

First Edition: May 2009
© by Manaosai Verlag
© Chandravathanaa Selvakumaran
Email: chandra1200@gmail.com
Compilation: Chandravathanaa Selvakumaran
Illustrations & Cover design: Muunaa
Production: Chuvadi, Chennai - 600 005, India
Printed by: Chennai Micro Print (P) Ltd, Chennai – 29

ISBN- 978-3-9813002-1-5
Last Updated on Monday, 08 February 2010 07:39
Read more...
 
கப்டன் மயூரன்(சபா) PDF Print E-mail
Heroes
Written by சிவா தியாகராஜா   
Wednesday, 01 July 2009 08:43
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.
எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.

எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான்.

Last Updated on Monday, 08 February 2010 07:19
Read more...